சென்னை: ஓட்டலுக்கு அழைத்து இளம்பெண்ணிடம் பாலியல் சீண்டல்

சென்னை புழல் பகுதியைச் சேர்ந்த 25 வயது பெண், கணவருடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகிறார். கணவர் தன்னை துன்புறுத்துவதாக காவல் நிலையத்தில் புகார் அளித்த அவரை, வழக்கு குறித்து பேசுவதற்காக பெரம்பூர் ஓட்டலுக்கு வரவழைத்த ஓய்வுபெற்ற நீதிமன்ற உதவியாளர் ஞானப்பிரகாஷ் (68), பாலியல் ரீதியாக சீண்ட முயன்றார். இதனால் அதிர்ச்சியடைந்த இளம்பெண் கூச்சலிட, அருகில் இருந்தவர்கள் அவரை அடி வெளுத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

தொடர்புடைய செய்தி