தவெக தலைவர் விஜய் ஆட்சியமைக்க உரிமை கோரி இன்று (மே 7) காலையும் ஆளுநரை சந்தித்தார். பெரும்பான்மைக்கு 118 எம்எல்ஏக்கள் தேவையான நிலையில், தற்போது விஜய் வசம் காங்கிரஸ் ஆதரவுடன் 113 எம்எல்ஏக்கள் உள்ளனர். விஜய் ஆட்சி அமைக்க ஆளுநர் தடையாக இருப்பதாக, கமல், பிரகாஷ்ராஜ், திருமாவளவன் உள்ளிட்டோர் கருத்து தெரிவித்து வந்ததனர். இந்நிலையில், ஆட்சியமைக்க தவெகவுக்கு போதிய பெரும்பான்மை இல்லை என்பதை விஜயிடம் ஆளுநர் விளக்கியுள்ளதாக ஆளுநர் மாளிகையிலிருந்து செய்தி அறிக்கை வெளியாகியுள்ளது.