சென்னை பிராட்வே, ராஜா அண்ணாமலை மன்றம் அருகே வேகமாக வந்த பைக் சாலை தடுப்பில் மோதியதில் 2 பேர் உயிரிழந்தனர். பைக்கை ஓட்டி வந்த இம்ரான் என்பவர் சம்பவ இடத்திலேயே பலி, பின்னால் அமர்ந்து வந்த கசாலி பலத்த காயத்துடன் மீட்கப்பட்டுள்ளார். பலத்த காயங்களுடன் மீட்கப்பட்ட கசாலி, சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஹெல்மெட் அணியாமல் பைக்கை அதிவேகமாக ஓட்டி மோதியதால் உயிரிழப்பு என காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.