சென்னையில் உள்ள விஜிபி பூங்காவில் ராட்டினத்தில் ஏறிய மாணவி ஜப்ரீன் பாத்திமா, சீட் பெல்ட் அணியும் முன்பே ராட்டினம் இயக்கப்பட்டதால் கீழே விழுந்து முதுகுத்தண்டில் பலத்த காயமடைந்தார். ஈஞ்சம்பாக்கத்தில் நடந்த இந்த விபத்து தொடர்பாக நீலாங்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து, கவனக்குறைவாக செயல்பட்ட பூங்கா ஊழியர்கள் இருவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். மாணவி தற்போது சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.