சென்னை கதீட்ரல் சாலையில் உள்ள ஸ்டெல்லா மேரி கல்லூரியில் 2ஆம் ஆண்டு பிபிஏ படித்து வருபவர் ஆயிஷா. இவர் இன்று மாலை தேர்வு முடிந்து வெளியே வந்தவர் கல்லூரி மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றார்.
படுகாயமடைந்த மாணவியை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தகவலறிந்து வந்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், மாணவி மன அழுத்தத்தில் இருந்ததும், அதனால் தற்கொலைக்கு முயன்றது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.