சென்னை: மணல் லாரி பறிமுதல்

சென்னை பெரம்பூர் தாசில்தார் உமா மகேஸ்வரி தலைமையிலான குழுவினர் நேற்று முன்தினம் எருக்கஞ்சேரி சிக்னல் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியே வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். 

அதில், உரிய ஆவணங்களின்றி 2 யூனிட் மணல் கொண்டு செல்வது தெரியவந்தது. இதையடுத்து, தாசில்தார் உமா மகேஸ்வரி லாரியை பறிமுதல் செய்து கொடுங்கையூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். மேலும், இதுதொடர்பாக புகார் அளித்தார். 

அதன்பேரில், போலீசார் வழக்கு பதிந்து லாரி டிரைவரான செங்குன்றம் அம்பேத்கர் நகர் மெயின்ரோடு பகுதியை சேர்ந்த அஜித் (28) என்பவரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் செல்வமணி என்பவரை தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி