சென்னை: லஞ்சம் வாங்கிய எஸ். ஐ கைது

சென்னை: வண்ணாரப்பேட்டை காலிங்கராயன் தெருவை சேர்ந்தவர் பிரேம்குமார் (40). மாநகராட்சி தூய்மை பணியாளர். இவர், அதே பகுதியை சேர்ந்த செல்வம் என்பவரிடம் 2007ம் ஆண்டு ரூ. 10 ஆயிரம் வட்டிக்கு பணம் வாங்கியுள்ளார். மாதம் ரூ. 1,000 வீதம், 18 மாதங்கள் பணம் செலுத்தினார். வாங்கிய பணத்தை விட ரூ. 8,000 கூடுதலாக செலுத்திய பின்னும், கூடுதல் பணம் கேட்டு செல்வம் தகராறு செய்துள்ளார். மேலும், பிரேம்குமார் மீது வண்ணாரப்பேட்டை போலீசில் புகார் செய்தார். 

இதை, சிறப்பு எஸ்.ஐ., ஜெயக்குமார் விசாரித்து, பிரேம்குமாரிடம் இருந்து ரூ. 10 ஆயிரத்தை வாங்கி செல்வத்திடம் கொடுத்துள்ளார். கடன் பத்திரம் மற்றும் ஆவணங்கள் அனைத்தும் சிறப்பு எஸ்.ஐ ஜெயக்குமாரிடம் இருந்தது. அதை தர வேண்டும் என்றால் ரூ. 1,500 லஞ்சம் தர வேண்டும் என பிரேம்குமாரிடம் சிறப்பு எஸ்.ஐ., கேட்டுள்ளார். ஏற்கனவே ரூ. 28 ஆயிரம் கொடுத்துவிட்ட நிலையில் விரக்தியடைந்த பிரேம்குமார், லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். போலீசாரின் அறிவுரைப்படி, கடந்த 2011ம் ஆண்டு பிப்ரவரி 4ம் தேதி லஞ்ச பணத்தை பிரேம்குமார் கொடுத்த போது, ஜெயக்குமாரை கையும் களவுமாக போலீசார் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி