சென்னை: குழந்தைகளின் கழுத்தை அறுத்த தாய்: போலீசார் விசாரணை

சென்னை கீழ்பாக்கம் புல்லாபுரம் மூன்றாவது தெருவில் வசித்து வருபவர் திவ்யா (31). இவருக்கு 4.5 வயதில் ஒரு மகனும், 1.5 வயதில் ஒரு மகனும் இருக்கின்றனர். ஆறு ஆண்டுகளுக்கு முன்பு இவருக்கு பெருங்களத்தூர் பகுதியைச் சேர்ந்த ராம்குமார் என்பவருடன் திருமணம் ஆகியுள்ளது. 

கணவனுக்கும் மனைவிக்குமிடையே அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டு வந்த காரணத்தால் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கணவனைப் பிரிந்து தனது இரண்டு குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு கீழ்பாக்கம் புல்லாபுரத்திலுள்ள தனது தாய் வீட்டிற்கு வந்து வசிக்கத் தொடங்கியுள்ளார். இந்த நிலையில் ஆந்திர மாநிலம் நெல்லூரில் இருந்து திவ்யாவின் அத்தை வீட்டிற்கு வந்துள்ளார். வெகுநேரமாகக் கதவைத் தட்டியுள்ளார். மீண்டும் கதவைத் தட்டி திவ்யாவை அழைத்துள்ளனர். 

அப்போது திவ்யா கழுத்தில் ரத்தம் வடிய கதவை திறந்துள்ளார். இதனால், அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் வீட்டினுள் சென்று பார்த்த போது இரண்டு ஆண் குழந்தைகளும் கழுத்தறுக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கீழ்பாக்கம் காவல் துறையினர் திவ்யாவையும், உயிருக்கு போராடிக் கொண்டிருந்த 4.5 வயது குழந்தையையும் மீட்டு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். 1.5 வயது குழந்தை மட்டும் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்துவிட்டது.

தொடர்புடைய செய்தி