சென்னை: இன்ஸ்டாகிராம் மூலம் போதை மாத்திரை விற்பனை

சென்னை கொடுங்கையூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் போதை மாத்திரைகளை விற்றதாக இன்ஸ்டாகிராம் பிரபலம் அரவிந்த் உட்பட 6 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். அவர்களது வீடுகளில் நடத்தப்பட்ட சோதனையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன. பீகாரில் இருந்து போதை மாத்திரைகளை வாங்கி வந்து, இன்ஸ்டாகிராம் மூலம் வாடிக்கையாளர்களை வரவழைத்து விற்பனை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி