தமிழக முதலமைச்சராகப் பதவியேற்ற பிறகு விஜய் முதன்முறையாக இன்று (மே 27) தனி விமானம் மூலம் டெல்லி சென்றார். அங்கு பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து, தமிழ்நாடு சார்ந்த கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கினார். இந்த சந்திப்பு சுமார் 10 நிமிடங்கள் நீடித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரையும் அவர் சந்திக்கவுள்ளார். இன்று டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் தங்கும் முதலமைச்சர் விஜய், நாளை (மே 28) சென்னை திரும்புகிறார்.