இது குறித்து சென்னை மாநகராட்சி மன்றக் கூட்டத்திலும் கோரிக்கை வைக்கப்பட்டது. அதற்கு சென்னை மாநகராட்சி சார்பில் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. பொது போக்குவரத்தில் மின்சார வாகனங்களை ஊக்குவிக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அந்தவகையில், ரயில் பயணிகளின் வசதிக்காக மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் மையம் அமைக்க ரயில்வே திட்டமிட்டுள்ளது. அதன்படி, ஏற்கனவே உள்ள சார்ஜிங் வசதிகளை மேம்படுத்தவும், சில ரயில் நிலையங்களில் புதிதாக அமைக்கவும் முடிவு செய்யப்பட்டு, பணிகள் நடைபெற்று வருகிறது.