சாலை தடுப்பில் மோதி நின்ற பேருந்தால் பரபரப்பு

சென்னை: நேற்று மாலை, தலைமைச் செயலகம் - திருவான்மியூர் செல்லும் வழித்தடம் எண் 102-பி மாநகரப் பேருந்து, ஓட்டுநர் முகமது பிலால் கவனக்குறைவால் மெரினா லுாப் சாலையில் சாலை மையத் தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது. அதிர்ஷ்டவசமாக, பேருந்தில் இருந்த யாருக்கும் காயம் ஏற்படவில்லை. பயணிகள் அனைவரும் பத்திரமாக மாற்றுப் பேருந்தில் அனுப்பி வைக்கப்பட்டனர். மயிலாப்பூர் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி