வியாசர்பாடி, காந்தி நகர் பகுதியைச் சேர்ந்த ஸ்ரீ கமல விநாயகர் கோவிலில் பொருளாளராக உள்ள அந்தோணிராஜ், நேற்று காலை கோவிலைத் திறந்தபோது, உண்டியல் உடைக்கப்பட்டு காணிக்கை பணம் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. இது குறித்து அவர் அளித்த புகாரின் பேரில், எம். கே. பி. நகர் போலீசார் கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.