இவரது மூத்த மகளுக்கு குழந்தை பிறந்த நிலையில், கடந்த மாதம் 30ம் தேதி குழந்தையை பார்க்க, மருத்துவமனைக்கு சென்றார். அதன் பின் காணவில்லை. அவரது மொபைல்போன் எண்ணும் தொடர்பில் இல்லை.
இதனால் நேற்று முன்தினம்(செப்.3) இரவு, சந்தானத்தின் மருமகன் சுபாஷ் என்பவர் சென்று பார்த்த போது, சந்தானம் வீடு திறந்திருந்த நிலையில், ரத்தக்கறையும், ரத்தம் படிந்த இரண்டு கத்திகளும் கிடந்துள்ளன. இருதய சிகிச்சைக்காக திருச்சியிலிருந்து அழைத்து வரப்பட்ட பச்சிளங்குழந்தை இரண்டரை மணி நேரத்தில் கோவை வருகை அதிர்ச்சியடைந்த சுபாஷ், ஓட்டேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
போலீஸ் விசாரணையில், தனிமையில் இருந்த சந்தானம், மன அழுத்த நோயால் பாதித்து, கையை கத்தியால் கீறி, தற்கொலைக்கு முயன்றுள்ளார். பின் மனம் மாறி, வில்லிவாக்கத்தில் உள்ள இரண்டாவது மகள் வீட்டிற்கு சென்று தங்கியுள்ளார். இதையடுத்து, சந்தானம் மற்றும் அவரது இரண்டாவது மகளை அழைத்து பேசிய போலீசார், அவருக்கு 'கவுன்சிலிங்' தர வலியுறுத்தி அனுப்பி வைத்தனர்.