புளியந்தோப்பு: வங்கி ஊழியர் மீது தாக்குதல்; ஒருவர் கைது

புளியந்தோப்பு திக்காகுளத்தை சேர்ந்தவர் பிரேம், 24. ஒப்பந்த அடிப்படையில், வங்கியில் உதவியாளராக வேலை செய்து வருகிறார். நேற்றுமுன்தினம் (ஜூலை 30) இரவு, இரு சக்கர வாகனத்தில் வீட்டுக்கு சென்றபோது, பிரேமை வழிமறித்த இருவர், வீண் தகராறு செய்து கத்தியால் தலையில் வெட்டினர். தலையில் பலத்த காயமடைந்த பிரேம், ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். புளியந்தோப்பு போலீசார் வழக்கு பதிந்து, பிரேமை தாக்கிய பட்டாளத்தை சேர்ந்த மகேஷ் (19) என்பவரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள மற்றொருவரை தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி