அவர் அளித்த தகவலின்பேரில், வில்லிவாக்கம் சிவன் கோயில் தெருவில் உள்ள வீட்டில் இருந்தும் குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக வில்லிவாக்கம் ஜெகநாதன் நகரைச் சேர்ந்த பிரகாஷ் (50) என்பவரையும் கைது செய்தனர்.
மொத்தம் 25 கிலோ குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். பிறகு அயனாவரம் போலீசார் வழக்கு பதிந்து இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.