நிகமத் நிஷா, ரூ. 7 லட்சம் கொடுத்தால் ஒப்பந்தம் செய்து கொண்டு நீங்கள் அந்த வீட்டில் குத்தகைக்கு குடியேறலாம் எனவும் தெரிவித்துள்ளார். இதையடுத்து, தருமன் ரூ. 7 லட்சம் கொடுத்து சம்பந்தப்பட்ட வீட்டில் குடியேறியுள்ளார். அதன் பிறகுதான், அந்த வீட்டின் உரிமையாளர் நிகமத் நிஷா இல்லை என்பதும், அவர் வேறு ஒருவருடைய வீட்டை வாடகைக்கு எடுத்து அதை உரிமையாளருக்கு தெரியாமல் தருமனுக்கு குத்தகைக்கு விட்டு பண மோசடியில் ஈடுபட்டதும் தெரியவந்தது. அதுமட்டுமல்லாமல் மேலும் 46 பேரிடம் ரூ. 7 லட்சம் முதல் ரூ. 10 லட்சம் வரை மொத்தம் ரூ. 3 கோடி வரை வாங்கி இதே பாணியில் மோசடி செய்திருப்பதும் தெரியவந்தது.
இதையடுத்து ஒப்பந்தத்தை முடித்துக்கொண்டு, கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்டபோது நிகமத் நிஷா மாயமானார். இந்த விவகாரம் தொடர்பாக தருமன் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸில் புகார் தெரிவித்தார். இதையடுத்து, தலைமறைவாக இருந்த நிகமத் நிஷாவை போலீஸார் கைது செய்தனர்.