இது தொடர்பாக சென்னை ஐஐடி வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில் சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழக (ஐஐடி மெட்ராஸ்), புத்தாக்க மையத்தின் திறந்தவெளி அரங்கு-2025 (CFI Open House) நிகழ்வு இக்கல்வி நிறுவன வளாகத்தில் இன்று நடைபெற்றது. இதில், 26 குழுக்களைச் சேர்ந்த ஏறத்தாழ 1, 000 மாணவ-மாணவிகள் உருவாக்கிய 60 அதிநவீன தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகள் காட்சிப்படுத்தப்பட்டன.
இந்தியாவிலேயே மிகப்பெரிய அளவில் மாணவர்களால் நடத்தப்படும் கண்டுபிடிப்பு ஆய்வகமான, புத்தாக்க மையத்தில் பல்வேறு தொழில்நுட்பக் களங்களை உள்ளடக்கிய 14 கிளப்புகள், தேசிய - சர்வதேச நிகழ்வுகளில் விறுவிறுப்புடன் பங்கேற்கும் போட்டிக்கான 8 அணிகள் உள்ளன. ஆண்டுதோறும் நடத்தப்படும் புத்தாக்க மைய திறந்த வெளி அரங்கு நிகழ்வில், மாணவர்களால் வடிவமைக்கப்பட்டு கட்டமைக்கப்பட்ட தயாரிப்புகள் இடம்பெறுகின்றன.
இந்தியாவில் நிலையான அதிவேக போக்குவரத்தின் எதிர்காலத்தை இயக்குவதாக அமைந்துள்ளது. இந்த வெற்றிகள் சிஎஃப்பின் தொழில்நுட்பக் கண்டுபிடிப்பு மற்றும் உலகளாவிய தாக்கத்தின் மரபில் மற்றொரு மைல்கல்லாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.