இதன் தொடர்ச்சியாக மந்தைவெளி பேருந்து நிலையத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், போக்குவரத்து அமைச்சர் சா. சி. சிவசங்கர் பங்கேற்று ரூ. 2 ஆயிரம் பயண அட்டையை அறிமுகம் செய்து பயணிகளுக்கு வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியதாவது, நடப்பாண்டு இறுதிக்குள் 225 மின்சார ஏசி பேருந்துகள் பயன்பாட்டுக்கு வரும் நிலையில், ரூ. 2 ஆயிரம் பயண அட்டை திட்டம் பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
ஏசி பேருந்து உட்பட அனைத்து பேருந்துகளிலும் பயணிப்பதற்காக ரூ. 2 ஆயிரம் பயண அட்டை வழங்கப்படுகிறது. ரூ. 1000 பயண அட்டையும் பயன்பாட்டில் இருக்கும். அதன் விலையை உயர்த்தவில்லை. சிக்னல்களில் பேருந்துகளுக்கு முன்னுரிமை அளிக்கும் திட்டம் குறித்து சாலை வசதிக்கேற்ப பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.
நிகழ்வில், மாநகர போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் த. பிரபுசங்கர், இணை மேலாண் இயக்குநர் செ. நடராஜன், தொமுச பேரவைத் தலைவர் கி. நடராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.