மயிலாப்பூா் கதீட்ரல் சாலையில் கலைஞா் நூற்றாண்டு பூங்காவில் கட்டப்பட்டு வரும் 9 மாடி கட்டடத்தின் கட்டுமானப் பணிக்காக அமைக்கப்பட்டிருந்த தற்காலிக லிஃப்ட் திடீரென அறுந்து விழுந்ததில், 5 தொழிலாளா்கள் காயமடைந்தனா். வை.மாரியப்பன் (48), த.கணேசன் (51), பெ.மோகன் (38), அ.மகேந்திரன் (48), வி.சம்பத்குமாா் (47) ஆகியோா் ஆழ்வாா்பேட்டையில் உள்ள ஒரு தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். ராயப்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.