தமிழக மக்களுக்கு அதிமுக தேர்தல் சுற்றுப்பயணம் குறித்து விவரித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில், என்னுள் கலந்திருக்கும் எனது அருமைத் தமிழக மக்களே, உங்கள் அனைவருக்கும் எனது அன்பான வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் அனைவருக்கும் ஓர் இனிய செய்தியை சொல்லவே இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். இதை எழுதும்போதே எனது உள்ளம் மகிழ்ச்சியாலும் உவகையாலும் நிறைகிறது. என்னைப் பற்றி எல்லாமும் உங்களுக்குத் தெரியும். என்னிடம் எந்த ரகசியமும் இல்லை.
மக்கள் மனத்தில் நீறுபூத்த நெருப்பாக வேதனை சூழ்ந்து கொண்டிருக்கிறது. எல்லாவற்றுக்கும் மேலாக, ஆளும் தி.மு.க. அரசாங்கம் தமிழ்நாட்டு மாணவர்களின் கல்வியில்கூட அரசியல் செய்கிறது. அமைதியான தமிழ்நாடு, வளமான தமிழ்நாடு, நிறைவான தமிழ்நாடு; இவைதான் நமது லட்சியம். நாம் வெல்வது நிச்சயம். முடியாத கொடுமைக்கு முடிவுகட்டுவோம். விடியாத ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவோம். தீய சக்தியை வதைத்திட, நல்லாட்சியை விதைத்திட, விலகாத இருள் விலகட்டும், தமிழகத்தில் அதிமுக ஆட்சி மலரட்டும் எனத் தெரிவித்துள்ளார்.