சென்னை: கட்சியிலிருந்து நான் விலகுவதாக பொய் பிரச்சாரம் - ஜெயக்குமார்

பாஜக கூட்டணி அமைந்தால் கட்சியிலிருந்து விலகுவதாக திட்டமிட்ட பொய்ச் செய்தி பரப்பப்படுகிறது. நான் எந்த நேரத்திலும் அவ்வாறு சொல்லவே இல்லை. இது திட்டமிட்ட ஒரு பொய் செய்தி. இதுபோன்ற பொய்ச் செய்திகளைப் பரப்பி அற்ப ஆசை கொள்ள வேண்டாம், என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

சென்னையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம், அதிமுக பாஜகவின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டது, என்று விசிக தலைவர் திருமாவளவன் விமர்சனம் செய்திருப்பது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “பாஜக கூட்டணி அமைந்தால் கட்சியிலிருந்து விலகுவதாக கூறினாரே என்று சொல்லி திருமாவளவன் அவருடைய கருத்தை கூறியிருக்கிறார்.

நான் எந்த நேரத்திலும் அவ்வாறு சொல்லவே இல்லை. இது திட்டமிட்ட ஒரு பொய் செய்தி. இதை திட்டமிட்டு பரப்பி, நான் ஏதோ கட்சியில் இருந்து விலகுவதாகவும் கூறியதுபோல சொல்லப்படுகிறது. நான் எப்போது அவ்வாறு கூறினேன்? அதாவது நான் சொல்லாத, நினைத்துக் கூடப் பார்க்காத செய்தியை, கடந்த 4 நாட்களாக வேண்டுமென்றே சமூகவலைதளங்களில் பரப்பி வருகின்றனர். இந்த செய்தியை பரப்பியதன் மூலம் சில யூடியூப் சேனல்களுக்கு என்னால் ஒரு வருமானம் கிடைத்ததில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி என்று அவர் கூறினார்.

தொடர்புடைய செய்தி