சென்னை: பிரியாணிக்கு பணம் தர மறுத்த வாலிபர் மண்டை உடைப்பு

புளியந்தோப்பு பகுதியில், பிரியாணி வாங்க பணம் தர மறுத்ததால் வாலிபரின் தலையை பீர் பாட்டிலால் தாக்கி காயப்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டிமலர்ஸ் சாலையைச் சேர்ந்த சரவணன் (24) என்பவர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், புளியந்தோப்பு போலீசார் கே.பி.பார்க் பகுதியைச் சேர்ந்த பிலிப்ஸ் (24) என்பவரை கைது செய்துள்ளனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய சந்தோஷ் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர். காயமடைந்த சரவணன் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

தொடர்புடைய செய்தி