சென்னை குடிநீர் வாரியம் சார்பில், மாதம்தோறும் இரண்டாவது சனிக்கிழமைகளில் நடத்தப்படும் குறைதீர் கூட்டம் இன்று (10ம் தேதி) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை அனைத்து பகுதி அலுவலகங்களிலும் நடைபெறும். பொதுமக்கள் குடிநீர், கழிவுநீர் பிரச்னைகள், வரி, கட்டணங்கள் மற்றும் புதிய இணைப்புகள் குறித்த சந்தேகங்களை மனுக்கள் வாயிலாக நேரில் தெரிவித்து பயன்பெறலாம்.