சென்னை: தயாரிப்பாளர் கே.ராஜன் தற்கொலை.. நீடிக்கும் மர்மம்

பிரபல சினிமா தயாரிப்பாளர் கே.ராஜன் (85) நேற்று மாலை அடையாறு மேம்பாலம் அருகே காரில் இருந்து இறங்கி ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். ஒன்றரை மணி நேர போராட்டத்திற்குப் பிறகு அவரது உடல் மீட்கப்பட்டது. குடும்பத் தகராறால் கடந்த 5 வருடங்களாக தனியார் ஓட்டலில் தங்கியிருந்த கே.ராஜன், கடன் சிக்கல், தனிமை அல்லது உடல்நலக்குறைவால் இந்த விபரீத முடிவை எடுத்தாரா என அடையாறு போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுவரை தற்கொலைக்கான தெளிவான காரணம் தெரியவில்லை.

தொடர்புடைய செய்தி