சென்னை மாநகராட்சி சார்பில் தூய்மைப் பணியாளர்களுக்கு இலவச உணவு வழங்கும் திட்டத்தை நவம்பர் 15ஆம் தேதி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். 3 வேளைகளிலும் இலவச உணவு வழங்கும் இத்திட்டத்தில் 31,373 தூய்மைப் பணியாளர்கள் பயனடையவுள்ளனர். மழை, பனி, வெயில் என பாராமல் சேவை செய்யும் தூய்மைப் பணியாளர்களை ஊக்குவிக்கும் பொருட்டு இத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.