சென்னை போயஸ்கார்டனில் உள்ள நடிகர் ரஜினிகாந்த் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதேபோல் இயக்குநர்கள் எஸ்.ஏ. சந்திரசேகர், ரவிகுமார் மற்றும் நடிகைகள் சாக்ஷி அகர்வால், பிரியா பவானி சங்கர் ஆகியோரின் வீடுகளுக்கும் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. டிஜிபி அலுவலகத்திற்கு இமெயில் மூலம் வந்த இந்த மிரட்டலைத் தொடர்ந்து, மோப்ப நாய்கள் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.