சென்னை: நீர்நிலை பராமரிப்புக்கு நிதி ஒதுக்கீடு.. ஜி.கே. வாசன் கருத்து

பல்வேறு மாவட்ட நீர்நிலைகளை பராமரிக்க நிதி ஒதுக்க வாய்ப்பில்லை என்று ஊரக வளர்ச்சித்துறை தெரிவித்துள்ளது. இது தமிழக அரசின் செயலற்ற தன்மையை எடுத்துக்காட்டுகிறது என்று தமாகா தலைவர் ஜி.கே. வாசன் கூறியுள்ளார். 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பருவ மழையும் தொடங்கிவிட்டதால் நீர்நிலைகளை பாதுகாக்க தமிழக அரசு முன்வர வேண்டும். சுமார் 25 ஆயிரம் சிறிய ஏரிகள், குளங்கள் நகராட்சி நிர்வாகத்துறை, ஊரக வளர்ச்சித்துறை மூலம் பராமரிக்கப்பட வேண்டும். ஆனால் முறையாக பராமரிக்கப்படாததால் பெரும்பாலான நீர்நிலைகளில் சீமைகருவை செடிகளும், ஆகாயதாமரை செடிகளும் புதராக மண்டிகிடக்கின்றன. 

இந்த கோடையில் நீர்நிலைகளை தூர்வார நிதி ஒதுக்கியிருக்க வேண்டும். ஆனால் திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சிவகங்கை, மதுரை, விருதுநகர், திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு மாவட்ட நீர்நிலைகளை பராமரிக்க நிதி ஒதுக்க வாய்ப்பில்லை என்று ஊரக வளர்ச்சித்துறை தெரிவித்துள்ளது. இது தமிழக அரசின் செயலற்ற தன்மையை எடுத்துக்காட்டுகிறது. 

எனவே தமிழக அரசு மாநிலத்தில் விவசாயத்துக்காக, குடிநீருக்காக நீர்நிலைகளை முறையாக பராமரிக்க, குடிமராமத்து பணிகளை தொடர்ந்து மேற்கொள்ள தேவையான நிதியை உடனடியாக ஒதுக்கி தமிழக மக்கள் நலன் காக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி