இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், வண்டலூர் - வாலாஜா பாத்சாலை படப்பையில் ஆமைவேகத்தில் நடைபெற்று வரும் மேம்பாலப் பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தியும்; சமீபத்தில் ஃபெஞ்சல் புயலால் ஏற்பட்ட கனமழை காரணமாக பாதிக்கப்பட்ட விவசாயிகள் உள்ளிட்ட பொதுமக்களுக்கு உரிய நிவாரணம் வழங்காத; கடுமையாக அதிகரித்துள்ள விலைவாசி உயர்வு, கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வு ஆகியவற்றைக் கட்டுப்படுத்தாத, விடியா திமுக-வின் ஸ்டாலின் மாடல் அரசைக் கண்டித்தும்;
குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட இடங்களில் குண்டும் குழியுமாக உள்ள சாலைகளை சீரமைக்காத, குடிநீர் வசதிகளை முழுமையாக ஏற்படுத்தாத குன்றத்தூர் ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்தைக் கண்டித்தும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக காஞ்சிபுரம் மாவட்டத்தின் சார்பில், ஜனவரி 9ம் தேதி வியாழக்கிழமை காலை 10 மணியளவில், படப்பையில் உள்ள குன்றத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.