இதற்காக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. புதிதாக கிழக்கு மாவட்டத்துக்கும், மேற்கு மாவட்டத்துக்கும் பாஜகவில் உள்ள சிலரின் பெயர்கள் பரிசீலனையில் உள்ளன. இவை கட்சி மாநில தலைவர் அண்ணாமலைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. நேர்மையற்றவர்கள் பாஜகவில் தலைவர்களாக வந்தால், வரும் சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொள்வது சிரமம். பாஜகவுக்கு கணிசமான வாக்கு வங்கி உள்ள குமரி மாவட்டத்தில் கட்சி செல்வாக்கு பாதியாக சரிவதற்கும் வாய்ப்புள்ளது. எனவே நேர்மையானவர்களை குமரி கிழக்கு, மேற்கு மாவட்ட நிர்வாகிகளாக நியமிக்க வேண்டும் என பாஜகவினர் தெரிவித்தனர்.
ஜனவரி 6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு