மாதவரம்: சுவர் இடிந்து விழுந்து தொழிலாளி பலி

மாதவரம் ரிங்ரோடு ஹவுசிங் செக்டார் 3ஆவது தெருவில் பழைய சுற்றுச்சுவரை இடிக்கும் பணியின்போது, எதிர்பாராத விதமாக சுவர் இடிந்து விழுந்ததில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளி குல்தீப் சௌத்ரி (42) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றொரு தொழிலாளிக்கு பலத்த காயமடைந்தார். மாதவரம் போலீசார் வழக்குப்பதிந்து ஒப்பந்ததாரர் மற்றும் பணியாளரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த குல்தீப் சௌத்ரிக்கு மனைவியும் மூன்று குழந்தைகளும் உள்ளனர்.

தொடர்புடைய செய்தி