பத்திரிகையாளர்களுக்கான சிறப்பு முகாம்: அமைச்சர்கள் பங்கேற்பு

சென்னை, செய்தி மக்கள் தொடர்புத் துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை, சென்னை பத்திரிகையாளர் மன்றம் மற்றும் அப்போலோ மருத்துவமனை இணைந்து நடத்தும் பத்திரிகையாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாமை அமைச்சர்கள் மு. பெ. சாமிநாதன், மா. சுப்பிரமணியன் ஆகியோருடன் இணைந்து குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து, அமைச்சர் சேகர் பாபு பார்வையிட்டார். மேலும், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் விபத்து மற்றும் அவசர சிகிச்சை செயலியினை (TAEI Registry 2. 0) தொடங்கி வைத்து, செய்தி மக்கள் தொடர்புத் துறையின் பத்திரிகையாளர் நல நிதியம் திட்டத்தின் கீழ் மருத்துவ நிதியுதவி 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையை பத்திரிகையாளர் கே. செந்தில்நாதன் மகனிடம் வழங்கினார்.

தொடர்புடைய செய்தி