துறைமுகத்தில் வெளிநாட்டு சிகரெட் கடத்தல்: விசாரணை

சென்னை துறைமுக சுங்கத்துறை சிறப்பு புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு, துபாயில் இருந்து தடை செய்யப்பட்ட வெளிநாட்டு போலி சிகரெட்டுகள் கப்பலில் கடத்தி வரப்படுவதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து, 'பிரின்டிங் இங்க்' என அனுப்பப்பட்ட கன்டெய்னரை சோதனை செய்ததில், 13 கோடி ரூபாய் மதிப்புள்ள 64.70 லட்சம் வெளிநாட்டு போலி சிகரெட்டுகள் கண்டெடுக்கப்பட்டன. இவை பறிமுதல் செய்யப்பட்டு, கடத்தலில் ஈடுபட்டவர்கள் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி