சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக பெய்து வரும் கனமழையால் சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளது. திருவல்லிக்கேணி பெரிய தெருவில், பாதாள சாக்கடை நீர் மழைநீருடன் கலந்து வருவதால் அப்பகுதி மக்கள் நோய் பரவும் அபாயம் குறித்து அச்சம் தெரிவித்துள்ளனர். இதை சரிசெய்ய கோரிக்கை வலுத்துள்ளது.