வில்லிவாக்கத்தில் ஏடிஎம் மையத்தில் கொள்ளை முயற்சி?

சென்னை வில்லிவாக்கம் பஜார் பகுதியில் உள்ள தனியார் வங்கியின் ஏ.டி.எம். மையம் நேற்று அதிகாலை திறந்த நிலையில் இருப்பதை பொதுமக்கள் கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். ஏ.டி.எம். இயந்திரத்தை திறந்து பார்த்தபோது, அதில் வைக்கப்பட்டிருந்த சுமார் ரூ. 25 லட்சம் பணம் அப்படியே இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி