பெரம்பூரைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ராணுவ வீரர் வேங்கடசாமி (64) என்பவரை, அவரது பக்கத்து வீட்டுக்காரரான காவலாளி துளசையா (54) கத்தியால் குத்தி கொலை செய்த வழக்கில், சென்னை முதன்மை செசன்சு கோர்ட்டு நீதிபதி கார்த்திகேயன், துளசையாவுக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். அபராதம் கட்டத் தவறினால் மேலும் 6 மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார். இந்த கொலை, வேங்கடசாமி துளசையாவின் மனைவியுடன் தொடர்ந்து பேசியதால் ஏற்பட்ட தகராறில் நிகழ்ந்தது.