அடுத்த கல்வியாண்டில் (2025-26) இளநிலை படிப்புகளுக்கான க்யூட் நுழைவுத் தேர்வு வரும் மே 8 முதல் ஜூன் 1ம் தேதி வரை நடக்கிறது. இதற்கான இணையதள விண்ணப்பப்பதிவு கடந்த மார்ச் 1ல் தொடங்கி 22ம் தேதி முடிவடைந்தது. இந்நிலையில் பல்வேறு தரப்பின் கோரிக்கைகளை ஏற்று விண்ணப்பிக்கும் கால அவகாசம் 2 நாட்கள் மட்டும் நீட்டிக்கப்பட்டுள்ளன. விருப்பமுள்ளவர்கள் https: //cuet. nta. nic. in/ என்ற இணையதளம் வழியாக இன்றைக்குள்(மார்ச் 24) துரிதமாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணம் செலுத்த மார்ச் 25ம் தேதி கடைசி நாளாகும். விண்ணப்பங்களில் மார்ச் 26, 27, 28ம் தேதிகளில் திருத்தம் மேற்கொள்ளலாம். ஏதேனும் சிரமம் இருப்பின் 011-40759000 என்ற எண் அல்லது cuet-ug@nta. ac. in என்ற மின்னஞ்சல் வழியாக தொடர்பு கொள்ளலாம். மேலும், ஹால்டிக்கெட் வெளியீடு உட்பட கூடுதல் விவரங்களை /www. nta. ac. in/ என்ற வலைத்தளத்தில் அறியலாம் என்று என்டிஏ செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.