சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக, அம்பத்தூர் மற்றும் தொழிற்பேட்டை பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும். அம்பத்தூர், TI Cycle 3வது பிரதான சாலை, 6 முதல் 9வது தெருக்கள், மகாத்மா காந்தி சாலை 4, 5, 6, 11, 12 தெருக்கள், காமராஜ் நகர் பிரதான சாலை, சிட்கோ தொழிற்பேட்டை, ரயில் நிலைய சாலை 5, 6, 7 தெருக்கள் ஆகியவை பாதிக்கப்படும்.