பெருங்குடி மண்டலத்தில் செயல் பொறியாளர், எர்த் மூவர் எந்திர வாகனங்களை வாடகைக்கு எடுப்பதற்கான 6 டெண்டர்களில் ரூ. 3 கோடி மதிப்பிலான முறைகேடு செய்ததாக புகார் எழுந்தது. இதன் விளைவாக, சென்னை மாநகராட்சி ஆணையர் ஒரு செயல் பொறியாளரை பணியிடை நீக்கம் செய்துள்ளார். மேலும், ஒப்பந்த ஊழியர்களின் சம்பளப் பணத்தில் முறைகேடு செய்த பூங்கா மேற்பார்வையாளர் ஒருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.