சென்னை: செவிலியர்கள் குளிப்பதை வீடியோ எடுத்தவர் கைது

சென்னையின் கொளத்தூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பணிபுரியும் 11 நர்சுகள், வாடகை வீட்டில் தங்கி உள்ளனர். அவர்கள் வீட்டில் உள்ள குளியலறையில் குளிக்கும் போது, ஒரு மர்ம நபர் மறைந்திருந்து செல்போனில் வீடியோ எடுத்தார். அதிர்ச்சியடைந்த நர்சுகள், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அந்த நபரைப் பிடித்து பெரவள்ளூர் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், அவர் செங்கல்பட்டு பகுதியைச் சேர்ந்த டைல்ஸ் ஒட்டும் தொழிலாளியான சத்யராஜ் (37) என்பது தெரியவந்தது.

தொடர்புடைய செய்தி