சென்னை: மது குடிப்பதை கண்டித்த கணவர்.. மனைவி தீக்குளிப்பு

சென்னை எம்கேபி நகரில், மது அருந்தும் பழக்கத்தைக் கண்டித்த கணவர் மீது ஆத்திரமடைந்த நந்தினி (34) என்பவர், செவ்வாய்க்கிழமை அதிகாலை காருக்கு ஊற்றுவதற்காக வைத்திருந்த டீசலை தன் மீது ஊற்றி தீக்குளித்துக்கொண்டார். இதில் பலத்த காயமடைந்த அவரை கணவர் ஆனந்தகுமார் மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து எம்கேபி நகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி