கிண்டியில் போதை மாத்திரை விற்ற நான்கு பேர் கைது

கிண்டி ரேஸ் கோர்ஸ் பேருந்து நிலையத்தில் வாடிக்கையாளர்களை ரகசியமாக வரவழைத்து போதை மாத்திரை விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில், அடையாறு மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் நேற்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது, நான்கு பேர் போதை மாத்திரைகளுடன் நின்றிருந்தனர். அவர்களை பிடித்து விசாரித்ததில், ஆதம்பாக்கத்தை சேர்ந்த பாலாஜி (20), சரவணன் (21), தீபக் பாண்டியன் (21), அரவிந்த் என தெரியவந்தது. அவர்களை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 1,190 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.

தொடர்புடைய செய்தி