சென்னை கொடுங்கையூர் குப்பை கிடங்கில் நேற்று அதிகாலை திடீரென தீ பரவியது. கொருக்குப்பேட்டை, சத்தியமூர்த்தி நகர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 10க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் விரைந்து, இரண்டு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இது குறித்து கொடுங்கையூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.