தர்மபுரியைச் சேர்ந்த சிலம்பரசன் என்பவர் சென்னை செயின்ட் தாமஸ் மவுண்ட்டில் இருந்து சென்ட்ரல் பார்க் ஸ்டேஷனுக்கு மின்சார ரயிலில் பயணித்தபோது தனது பையைத் தவறவிட்டார். அந்தப் பையில் விலை உயர்ந்த லேப்டாப், தங்க நகைகள், ரூ.9 ஆயிரம் பணம் இருந்தன. சென்னை பீச் ரயில் நிலையத்தில் பணியில் இருந்த ரயில்வே காவலர் ரேகா மீனா அந்தப் பையைக் கண்டெடுத்து, உரிமையாளருக்குத் தகவல் அளித்தார். சுமார் ரூ.4 லட்சம் மதிப்பிலான பொருட்கள் பத்திரமாக உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டன.