சென்னை: பிளஸ்-2 மாணவிக்கு தச்சுத்தொழிலாளி பாலியல் தொல்லை

சென்னையை அடுத்த சேலையூரில் வசிக்கும் பிளஸ்-2 மாணவிக்கு, தாயாரின் தோழியின் கணவரான தச்சுத்தொழிலாளி சங்கர் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது. தாயார் கொடுத்த நகையை அவரது தோழியிடம் கொடுக்கச் சென்றபோது, சங்கர் மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக தெரிகிறது. அதிர்ச்சியடைந்த மாணவி மருந்துக்கடையில் மாத்திரை வாங்கிச் சாப்பிட்டு மயங்கி விழுந்த நிலையில், மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மாணவியின் தாயார் அளித்த புகாரின் பேரில் சங்கர் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

தொடர்புடைய செய்தி