சென்னை: பணம் பறித்த நான்கு பேர் கைது

சென்னை அமைந்தகரையைச் சேர்ந்தவர் காட்வின். ஆட்டோ ஓட்டுனர். இவர், நண்பர்களான விக்னேஷ், ஹரிஷ் ஆகியோருடன், நேற்று முன்தினம், கொளத்தூரில் வண்ண மீன் வாங்க ஆட்டோவில் சென்றார். கொளத்தூர், வரலட்சுமி நகர் அருகே, ஆட்டோவை வழிமறித்து இருவர் 'லிப்ட்' கேட்டுள்ளனர். அவர்களையும் ஏற்றிக் கொண்டு, வரலட்சுமி நகர் 3வது தெருவில் சென்று கொண்டிருந்தார். 

அப்போது, ஆறு பேர் வழிமறித்துள்ளனர். அவர்களுடன் ஆட்டோவில் ஏறிய இருவர் உட்பட எட்டு பேரும் சேர்ந்து, காட்வின் உட்பட மூவரையும் தாக்கி, 3,500 ரூபாயை பறித்துச் சென்றனர். இதுகுறித்து கொளத்தூர் போலீசார் விசாரித்து, 'மோளம்' கார்த்திக், (24), கிஷோர், (23), இளங்கோவன், (20), மற்றும் விஷால்ராம், (26), ஆகிய நான்கு பேரை நேற்று கைது செய்தனர். மற்றவர்களை தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி