சென்னை: கேலி கிண்டல் பேசிய அதிமுகவினர் - அமைச்சர் ஆதவ் அர்ஜூனா

அண்ணா தொழிற்சங்க செயலாளர் கமலகண்ணன் இன்று (மே 28) தனது ஆதரவாளர்களுடன் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, செங்கோட்டையன் முன்னிலையில் தவெகவில் இணைந்தார். நிகழ்ச்சியின் போது ஆதவ் அர்ஜூனா பேசுகையில், செங்கோட்டையன் தவெகவில் இணைந்தபோது அதிமுகவினர் கேலி செய்தனர். ஆனால் இன்று அதிமுகவினர் பலர் கட்சியில் இணைகின்றனர். இன்னும் ஒரு மாதத்தில் 90 சதவீத அதிமுக நிர்வாகிகள் தவெகவுக்கு வருவார்கள். அதிமுகவினருக்கு ஆஃபார் எதுவும் கொடுத்து அழைக்கவில்லை என்று கூறினார். கமலகண்ணன் மூலம் தொழிற்சங்கத்தை கட்டமைக்க தவெக தலைமை திட்டமிட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி