தமிழக சட்டசபை தேர்தலில் கொளத்துார் தொகுதியில் தி.மு.க. தலைவர் ஸ்டாலினை தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் வி.எஸ். பாபு தோற்கடித்தார். முதல்வர் விஜய் திருச்சி கிழக்கு தொகுதியில் நன்றி தெரிவித்த நிலையில், கொளத்துாரில் வெற்றி பெற்ற வி.எஸ். பாபு, விஜய் போன்ற தோற்றம் உடையவருக்கு முதல்வர் வேடமிட்டு, தொகுதி முழுதும் அழைத்துச் சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.