அதிர்ச்சியடைந்த பாரூக், படுகாயமடைந்த தனது மகனை மீட்பதற்காக உதவி செய்யுமாறு, விளையாட்டு அரங்கத்தில் இருந்த ஊழியர்களை அழைத்தபோது, யாரும் வரவில்லை என கூறப்படுகிறது. தனது மகனை மீட்டு, கொட்டிவாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளார். சிகிச்சைக்காக போரூர் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே பாரூக், நீலாங்கரை காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார்.
அதில், பொழுதுபோக்கு மையத்தின் அலட்சியத்தால் எனது மகனின் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இதுவரை 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வரை மருத்துவ செலவு செய்யப்பட்டுள்ளது. எனவே, பாதுகாப்பற்ற முறையில் செயல்பட்டு வரும் பிரபல பொழுதுபோக்கு மையத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்து இருந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.