சென்னை உயர்நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து, வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இதனால், உயர்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இந்த மிரட்டல் விடுத்த நபர் யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.